வேளாண் கழிவுகள், புகை, தூசி, ரப்பர் கழிவுகள் எரிப்பால் காற்றின் தரம் மிக மோசமடைந்திருப்பதாக டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பனிப்பொழிவு என்றாலும் கடும் குளிர் என்றாலும் மோசமான வெப்பம் என்றாலும் டெல்லிக்கு அதில் தனி இடம் உண்டு. கடந்த சில ஆண்டாகவே காற்று மாசுபாட்டினால் டெல்லி நகர மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆகவே கடந்த ஆண்டுகூட டெல்லியில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகளை வெடிப்பதற்கும் கட்டுப்பாடுகள் போடப்பட்டன. ஆரம்பத்தில் அதற்கு சில எதிர்ப்புகளும் எழுந்தன. வருங்கால தலைமுறையைப் பாதுகாக்க வேண்டி இந்தத் தடைகளை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் எனச் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.