ETV Bharat / bharat

கட்டாய மதமாற்றத்துக்கு வற்புறுத்திய கணவர் மீது வழக்கு! - கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட பெண்

மனைவியை இஸ்லாமிய மதத்திற்கு மாறக்கோரி வற்புறுத்திய கணவர் மீது டெல்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட பெண்
கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட பெண்
author img

By

Published : Dec 24, 2020, 12:55 PM IST

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு ராகுல் என்பவருடன் நட்பு ஏற்பட்டு பின்பு காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். திருமணத்திற்கு சில தினங்கள் முன்பு தனது காதலரின் உண்மையான பெயர் ஷகிப் அலி என்பதும், அவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதும் அப்பெண்ணுக்குத் தெரியவந்ததது.

இதனையறிந்த அந்நபர் தன்னை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் கொலை செய்து விடுவேன் என, காதலியை மிரட்டியதையடுத்து, இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சில நாள்களுக்குப் பின்பு, தனது மனைவியை வற்புறுத்தி இஸ்லாமியத்திற்கு மதமாற்றம் அடையச் செய்தார். தொடர்ந்து மனைவியின் பெயரையும் இஸ்லாமியப் பெயராக மாற்றினார்.

இந்தநிலையில் அப்பெண் டெல்லி சரிதா விஹார் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரில், "தனது கணவரின் குடும்பத்தினர் தன்னை கட்டாய மதமாற்றம் அடையச் செய்தனர். பர்கா அணிய வேண்டும் என நெருக்கடிகள் கொடுத்தனர். மேலும் எனது மாமனார் என்னிடம் தவறாக நடந்துக்கொண்டார் "என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அந்நபர் மீது கடத்தல், கற்பழிப்பு, கட்டாயத் திருமணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லி விமான நிலையத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.