குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கடந்த மூன்று நாள்களாக வன்முறையாக மாறியது. இந்த வன்முறை தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை பாதிக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டார்.
இந்நிலையில் கலவரத்தில் தலைமைக் காவலர் ரத்தன் லால், உளவுப் பிரிவு பணியாளர் உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளதாக ஜி.டி.பி. மருத்துவமனை தெரிவித்துள்ளது.
வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து வடகிழக்கு டெல்லி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், டெல்லி வன்முறை கட்டுக்குள் வந்துள்ளதாகக் கூறயிருந்தது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க...டெல்லி வன்முறை: உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு பாஜக ரூ.1 கோடி நிவாரணம்