கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு டெல்லி பல்கலைக்கழகம், அதன் ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை தர முன்வந்துள்ளது.
மேலும் கரோனா தொற்றால் எழும் நிலையை சரி செய்யவும், வளர்ந்து வரும் கல்வி, நிர்வாக பொறுப்புகளுக்கு பரிந்துரைகளை வழங்கவும் பல்கலைக்கழகம் ஒரு பணிக்குழுவை நியமித்துள்ளது.
கரோனா தொற்று பரவிவரும் இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் மக்களுக்கு உதவ பெரிய அளவில் மத்திய அரசுக்கு நிதி தேவைப்படும் என டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பல்கலையில் பணிபுரியும் கற்பிக்கும் ஊழியர்கள், கற்பிக்காத ஊழியர்கள் என அனைவரின் ஒரு நாள் சம்பளத்தையும் தர டெல்லி பல்கலைகழகம் முடிவு செய்துள்ளது.
ஒரு நாள் ஊதியத்தையும் மீறி மத்திய நிவாரண நிதிக்கு ஊழியர்கள் உதவ புதிய மொபைல் அப்ளிகேஷனையும் பல்கலைக்கழகம் உருவாக்கிவருகிறது.
இதையும் படிங்க... கரோனா நிதி: உண்டியல் பணம் ரூ.9000 வழங்கிய 5 வயது சிறுமி