டெல்லி கலவர வழக்கில் கடந்த வாரம் இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல்செய்யப்பட்டன. அவை:
- சந்த் பாக் கலவர சம்பவம்
- ஜாஃப்ராபாத் கலவர சம்பவம்
சந்த் பாக் கலவர வழக்கில், இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் (AAP) கவுன்சிலர் தாஹிர் உசேனின் வீட்டில் டெல்லி கலவரத்தின்போது பெட்ரோல் குண்டுகள் இருந்தன என சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) கண்டுபிடித்துள்ளது.
டெல்லி கலவரத்தில் தாஹிர் உசேனுடன் அவரின் சகோதரர் ஷா ஆலம் உள்பட மேலும் 15 பேருக்குத் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாஹிர் உசேன்தான் கலவரத்தை நடத்த வெடிமருந்துகளை வாங்க பணம் கொடுத்தார் என டெல்லி காவல் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜனவரி 31ஆம் தேதி வெடிமருந்துகளை வாங்க உசேன் 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 'தடுப்பு மருந்தை உருவாக்குவதில் சர்வதேச ஒத்துழைப்பை வலுவூட்ட சீனா முயற்சி'