ETV Bharat / bharat

குல்பிஷா ஃபாத்திமாவை விடுவிக்க வலுக்கும் ஆதரவு!

author img

By

Published : Jul 23, 2020, 7:56 AM IST

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவி குல்பிஷா ஃபாத்திமாவை,  விடுவிக்கக் கோரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குல்பிஷா பாத்திமாவை விடுவிக்க வலுக்கும் ஆதரவு!

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருந்தபோது, ​​ஏப்ரல் 9ஆம் தேதியன்று குல்பிஷா ஃபாத்திமா கைது செய்யப்பட்டார். அரசியலமைப்பை பாதுகாக்க துணிந்ததற்காகவும், மக்கள் விரோத CAA-NRC-NPR ஐ அமைதியாக எதிர்த்ததற்காகவும் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் அவர் மீது பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது" என்று 200க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கையெழுத்திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"போலீஸ் காவலில் இருந்தபோது அவர் மனரீதியாக சித்ரவதைக்கு ஆளாகியுள்ளார். அதோடு, அவரது பிணை விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்கள் கூறி நீதிமன்றங்களால் பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளன" என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சஃபுரா சர்கர், இஷ்ரத் ஜஹான், தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால், மீரன் ஹைதர், ஷர்ஜீல் இமாம், ஷார்ஜீல் உஸ்மானி, காலித் சைஃபி, அகில் கோகோய், தைர்ஜியா கொன்வர், பிட்டு சோனோவால், மனாஷ் கொன்வர் உள்ளிட்டோர் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களின்போது கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு அனைத்து இளம் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் துணை நிற்கிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான மன்றம், அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம், ஒற்றுமை மற்றும் தன்னார்வ நடவடிக்கைக்கான இளைஞர்கள், நீதி மற்றும் அமைதிக்கான மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின்போது வகுப்புவாத வன்முறை தொடர்பான வழக்கில் எம்பிஏ மாணவரும், பெண்கள் கூட்டு பிஞ்ச்ரா டோட் உடன் தொடர்புடைய சிஏஏ எதிர்ப்பு ஆர்வலருமான பாத்திமாவுக்கு மே 13 அன்று டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியது.

அப்பகுதியில் கலவரம் ஏற்படுத்த போராட்டக்காரர்களின் கூட்டத்தைத் தூண்டியதாக அவர் கைது செய்யப்பட்டார். சி.ஐ.ஏ மற்றும் குடிமக்களுக்கான தேசிய பதிவேட்டில் (என்.ஆர்.சி) எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 22ஆம் தேதி ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு டெல்லி வன்முறை தொடர்பான தனி வழக்கில் ஃபாத்திமாவும் கைது செய்யப்பட்டார், இதில் ஜே.சி.சி உறுப்பினர் மீரன் ஹைதர், சர்கார் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் ஆகியோர் யுஏபிஏ கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.