டெல்லி சட்டப்பேரவை காலம் வருகிற 22ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதனையடுத்து 70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட டெல்லிக்கு ஒரே கட்டமாக நேற்று (பிப். 8) வாக்குப்பதிவு நடந்தது.
இதில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. நடந்து முடிந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில், டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி 47 இடங்களிலும், பாஜக 23 இடங்களிலும் வெற்றி பெரும் என்றும் காங்கிரஸ் எதிலும் வெற்றிப்பெறாது எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி 59 முதல் 68 இடங்களிலும், பாஜக 2 முதல் 11 இடங்களிலும் வெல்லும். காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றிப் பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் கருத்து கண்ப்பில் ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் இதில் ஆம் ஆத்மி 49-61, பாஜக 9-21, காங்கிரஸ் 0-1 என்ற முறையை தொகுதிகளை கைப்பற்றலாம் எனத் தெரிவித்துள்ளது.
ஏபிபி நியூஸ் கருத்து கணிப்புகளின்படி, ஆம் ஆத்மி 49-63 இடங்களிலும், பாஜக 5-19 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 0-4 இடத்தில் வெல்லலாம் என கூறியுள்ளது.
டெல்லி சட்டசபை குறித்த அனைத்து கருத்துகணிப்பிலும் ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று முடிவு வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க...டெல்லி தேர்தல்: வாக்காளர்களுக்கு ஈடிவி பாரத் வாயிலாக கேஜ்ரிவால் வேண்டுகோள்!