தப்லீக் ஜமாத் அமைப்பு சார்பாக, நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விதிகளை மீறி, மாநாடு நடத்திய காரணத்தால் அந்த அமைப்பின் தலைவர் மவுலானா சாத் உள்பட ஏழு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இதனையடுத்து தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்விக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், மவுலானா சாத்திற்கு அரசு ஆய்வகத்தில் கரோனா பறிசோதனைசெய்யுமாறு, டெல்லி குற்றப்பிரிவுக் காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க:டெல்லி சமய மாநாட்டுக்குச் சென்றவரின் மனைவிக்கு கரோனா உறுதி