டெல்லி: டெல்லி சிறப்பு பிரிவு காவலர்களால் இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் குறித்து டெல்லி சிறப்பு பிரிவு காவலர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் காவலர்கள், சம்பவ பகுதியில் இருவரை கைதுசெய்தனர்.
இவர்கள் இருவரும் நேற்று (நவ.16-17) நள்ளிரவு நேரத்தில் கைது செய்யப்பட்டனர் என்று காவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தப் பயங்கரவாதிகள் இருவரும் ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் இருவரிடம் பல்வேறு ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது என்றும் விசாரணைக்கு பின்னர் முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மும்பை தாக்குதலும், பாகிஸ்தானின் சதியும்!