ETV Bharat / bharat

யூடியூப் சேனலுக்காக இந்தியா கேட் பகுதியில் ட்ரோன் பறக்கவிட்ட 3 இளைஞர்கள் கைது!

டெல்லி: யூடியூப் சேனலுக்காக இந்தியா கேட் பகுதியில் ட்ரோன் பறக்கவிட்ட மூன்று இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : Oct 12, 2020, 1:32 AM IST

r
ordord

டெல்லியில் மிகவும் ஹை சென்சிடிவ் பகுதியான ராஷ்டிரபதி பவனைச் சுற்றி ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு எந்த விதமான ட்ரோனும் அனுமதியின்றி பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை, இந்தியா கேட் பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் ஒன்று பறந்துக் கொண்டிருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் விரைந்த காவல் துறையினர், மூன்று இளைஞர்களை கைது செய்து அழைத்து வந்தனர்.

மூவரிடமும் தேசிய புலனாய்வுப் பணியகம் மற்றும் சிறப்பு படை அலுவலர்கள் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். கிடைத்த தகவலின்படி, கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அதில் பதிவேற்றம் செய்வதற்காக இந்தியா கேட் பகுதியை படம்பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஜாமீனில் விடுவித்தனர். மேலும், அவர்களிடமிருந்து ட்ரோன் கேமரா, ரிமோட் கண்ட்ரோல்கள் மற்றும் மெமரி கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.