டெல்லியின் உத்தம் நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இதில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன என முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.