டெல்லி ரன்ஜீத் நகரைச் சேர்ந்தவர் அன்சுமன். டெல்லி கலவரம் குறித்து வதந்தி பரப்பியதாக கடந்த இரண்டாம் தேதி காவலர்களால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்த அவரது வீட்டுக்கு நேற்று காவலர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது காவலர்களின் பிடியிலிருந்து தப்பிய அன்சுமன், மூன்றாவது மாடிக்கு வேகமாக ஏறி அங்கிருந்து குதித்தார். பலத்த காயத்துடன், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு காவலர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் கவனக்குறைவாக செயல்பட்ட காவலர்கள் நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
டெல்லியில் கடந்த மாதம் நடந்த வகுப்புவாத வன்முறையில் 44 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனை 6ஆவது மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை!