ETV Bharat / bharat

உலகிலேயே பிரமாண்டமான கரோனா சிகிச்சை மையம் டெல்லியில் திறப்பு! - துணை நிலை ஆளுநர் அனில் பைஜல்

டெல்லி: பத்தாயிரம் படுக்கை வசதிகள் கொண்ட உலகின் மிகப்பெரிய கரோனா சிகிச்சை மையத்தை டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் இன்று திறந்துவைத்தார்.

'largest' COVID-19 care centre
'largest' COVID-19 care centre
author img

By

Published : Jul 5, 2020, 2:43 PM IST

கரோனா வைரசிப் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கித்தவித்துவருகின்றன. பெருந்தொற்றுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் திணறிவருகின்றனர்.

இந்நிலையில், கரோனா பாதித்தவர்களிடமிருந்து சமூகப் பரவல் ஏற்படாத வண்ணம் அவர்களைத் தனிமைப்படுத்துவது அவசியமாகிறது. இதனைக் கருத்தில்கொண்டு டெல்லியில் உலகின் மிகப்பெரிய கரோனா சிகிச்சை மையம் இன்று திறந்துவைக்கப்பட்டது. இம்மையத்திற்கு சர்தார் படேல் கோவிட்-19 சிகிச்சை மையம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் இம்மையத்தைத் திறந்துவைத்தார். இங்கு 10 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்மையம் டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் அமைந்துள்ளது.

அறிகுறியில்லாமல் கரோனா தொற்றுடன் இருப்பவர்கள், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதியில்லாதவர்கள் ஆகியோருக்கு இந்த மையம் சிகிச்சை வழங்கும். சுமார் 1,700 அடி நீளம், 700 அடி அகலம் கொண்ட இந்த மையம் கிட்டத்தட்ட 20 கால்பந்து மைதானங்களின் அளவை உள்ளடக்கியது.

200 அறைகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு அறைக்கு 50 படுக்கைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மேலும் 200 படுக்கைகள் உயர்த்தப்படும் எனக் கூறப்படுகிறது. 75க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி அரசு இம்மையத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க, இந்தோ-திபெத் எல்லை காவல் துறை வழிநடத்துகிறது. சமயப் பிரிவான ராதா சோமி பியாஸ் செயல்பாட்டாளர்கள் இந்த மையத்தை நடத்த உதவுவார்கள்.

முன்னதாக, கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் வகையில் இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கி டெல்லியில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நான் தான் பிரதமர் அலுவலக பாதுகாப்பு ஆலோசகர், ரூம் குடுங்க!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.