இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பெய்துவரும் கன மழையால், யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அண்டை மாநிலமான அரியானவில் உள்ள ஹத்தினிகுண்ட்(Hathnikund) தடுப்பணை நிரம்பியுள்ளது.
தற்போது ஹித்தினிகுண்ட் அணையின் கொள்ளளவு கிட்டதட்ட ஆறு லட்சம் கியூசெக்ஸ் லிட்டரை தொட்டுள்ளதால், மாநில அரசு உத்தரவின் பேரில் ஹத்தினிகுண்ட்(Hathnikund) தடுப்பணையின் எல்லாம் கேட்டுகளும் திறந்துவிடப்பட்டன.
இதனால் டெல்லியில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் அபாயம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்களை அப்பகுஇதியிலிருந்து அப்புறப்படுத்தும் பணி நடைப்பெற்றுவருகிறது.
யமுனை ஆறு அரியானாவில் உள்ள யமுனா நகர் (Yamunanagar), கர்னல்(Karnal) பனிப்பட்(Panipat) ஆகிய மாவட்டங்களை கடந்துதான், டெல்லி செல்லும் என்பது குறிப்பிடதக்கது.