ETV Bharat / bharat

கரோனா அச்சத்தால் வருவாய்த் துறை அலுவலர் தற்கொலை

டெல்லி: தன்னால் தனது குடும்பத்தினருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் வருவாய்த் துறை அலுவலர் ஒருவர் ஆசிட் போன்ற திரவத்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

delhi-irs-officer-kills-self-by-ingesting-acid-over-fear-of-covid-19-infection

author img

By

Published : Jun 15, 2020, 1:05 PM IST

டெல்லி துவாரகா பகுதியில் 56 வயது மதிக்கத்தக்க இந்திய வருவாய்த் துறை அலுவலர் ஒருவர், கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு ஆசிட் போன்ற திரவத்தைக் குடித்து தனது காரிலேயே தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்துப் பேசிய காவல்துறையினர், டெல்லியின் துவாரகா பகுதியில், சுயநினைவை இழந்து காருக்குள் ஒருவர் மயங்கிக் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர் இந்திய வருவாய்த் துறையில் பணிபுரிந்தது தெரியவந்தது.

அவரை காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அவரது உடலை மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்ததில், ஆசிட் போன்ற திரவத்தை இவர் குடித்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், இவர் தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், நான் கடந்த வாரம் கரோனா தொற்று பரிசோதனை செய்துகொண்டேன். அதன் முடிவுகளில் எனக்கு கரோனா தொற்றினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரியவந்தது. இருப்பினும் என்னால் என் குடும்பத்தினரும் உயிர்க்கொல்லி வைரஸான கரோனாவால் பாதிக்கப்பட்டுவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்துகொண்டே இருந்தது. எனவே, எனது குடும்பத்தினரைக் காக்கவே தற்கொலை செய்துகொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

உடற்கூறாய்வு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அவரது தற்கொலை குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.