அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தானும் இன்னொரு ஆணும் சேர்ந்திருப்பது போன்ற மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் பேஸ்புக்,கூகுள், யூ ட்யூப் போன்ற தளங்களில் பதிவிடப்பட்டு தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவித்தது. அந்தப் புகைப்படங்களை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை செய்த நீதிபதி, மனுதாரர் அரசியல்வாதியாக தேர்தல் அரசியலில் பங்கெடுக்கக் கூடியவராக இருக்கிறார். எனவே, அவர் சந்திக்கும் நபர்கள் குறித்து அறிய மக்களுக்கு உரிமையிருக்கிறது என்று கூறினார்.
மேலும், பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.2 லட்சமும், கூகுள் நிறுவனத்திற்கு ரூ.2 லட்சமும் சசிகலா புஷ்பா அபராதம் செலுத்தவேண்டும் என உத்தரவிட்டு நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.