கரோனாவின் தீவிரம் குறித்து, மேலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக, அரசைப் பரவலாக விளம்பரம் செய்ய வலியுறுத்தி, புல்கித் ஜெயின் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதனை நீதிபதிகள் டி.என். பட்டேல், பரதீக் ஜலான் ஆகியோர் அமர்வு விசாரித்தது.
அப்போது, மத்திய - மாநில அரசுகளின் சுகாதாரத்துறை தரப்பில் இருந்து கரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "கரோனா விழிப்புணர்வு குறித்து சுகாதாரத் துறை எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. நாங்கள் இதற்கு மேல் எவ்வித அறிவுரையும் மத்திய - மாநில அரசுகளுக்கு வழங்குவதாக இல்லை.
இருப்பினும், மருத்துவ வல்லுநர்களின் பரிந்துரையின்படி, எவ்வித முகக்கவசங்கள் அணிய வேண்டும்; எவ்வாறு அதைப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி மக்களுக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும்படி அச்சு, தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு விளம்பரத்தை செய்ய வேண்டும். மேலும், டெல்லி மாநகராட்சி இணையதளத்திலும் முகக்கவசம் குறித்த விழிப்புணர்வை செய்ய வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: மழைக் காலங்களில் பயன்படுத்தக் கூடிய நீர்புகா முகக்கவசங்கள் தயாரிப்பு!