நிர்பயா வழக்கு குற்றாவாளிகளுக்கு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் குடியரசுத் தலைவரிடம் நிர்பயா பாலியல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரான பவன் குமார் குப்தா, கருணை மனுவை அளித்திருந்ததால், தூக்கு தண்டனை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
நேற்று, பவன் குமார் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தைத் தொடர்ந்து, புதிய தேதி கோரி நீதிமன்றத்தை டெல்லி அரசு தொடர்பு கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ராணா விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'மகளை காதலிப்பானோ' சந்தேகத்தில் சிறுவன் கொலை!