இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நிகழ்த்திய சம்பவத்தில் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக முழக்கமிட்டதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி காவல் துறையினர் கனையா குமார், உமர் கலீத், அனிர்பன் பட்டாச்சார்யா உள்ளிட்ட பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட கனையா குமார் உள்ளிட்ட ஒன்பது பேரும் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2019 ஜனவரி 14 ஆம் தேததியன்று, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மத்திய அரசின் அதிகாரத்திற்குள்பட்ட டெல்லி சிறப்புக் காவல் துறையினர் 1,200 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர் கனையா குமார் மீது தொடர்ந்த தேசத்துரோக வழக்குத் தொடர்பில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு நினைவூட்டலை அனுப்ப நீதிமன்றம் காவல் துறையினருக்கு அறிவுறுத்தியது.
இதன் பின்னர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசுக்கு டெல்லி காவல் துறையினர் ஒரு கடிதம் எழுதினர். இந்தக் கடிதத்தை அடுத்தே முன்னாள் மாணவர் தலைவர்கள் மீதான வழக்கை விரைவுபடுத்த அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதி வழங்கியுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : டெல்லி வன்முறை பாதித்த பகுதிகளைப் பார்வையிட காங்கிரஸ் குழு அமைப்பு!