சமூக நல்லிணக்கத்துக்காக நோயாளிகளுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் 'ஹேப்பினெஸ்' சிகிச்சை முறையை அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஜிடிபி மருத்துவமனையில் இந்த வருட தொடக்கத்தில் அறிமுகம் செய்துவைத்தார்.
இந்தத் திட்டம் பொது மக்களிடையே நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த சிகிச்சை முறை மேலும் ஐந்து அரசு மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இதுகுறித்து அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், 'இந்த சிகிச்சை முறையானது உடலையும் மனதையும் ஒருங்கிணைக்கும் அனுபவமாக இருக்கும். யோகா, நடனம், தியானம், போன்றவை இதில் பங்குபெறும்' என்றார்.