ETV Bharat / bharat

கொரோனா எதிரொலி: டெல்லியில் விரல் மூலம் வருகைப்பதிவு செய்ய தற்காலிகத் தடை

Delhi Government has temporarily suspended biometric attendance in its offices in wake of Coronavirus threat.

author img

By

Published : Mar 5, 2020, 4:23 PM IST

Updated : Mar 5, 2020, 5:33 PM IST

16:13 March 05

டெல்லியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு செய்யும் முறைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீன மக்களின் வாழ்க்கையை உருக்குலைத்த கொவிட்-19 (கொரோனா வைரஸ்) தற்போது இந்தியாவிலும் தலைகாட்டியுள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகிய இருவரும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மத்திய சுகாதாரத் துறை பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளது. அந்தந்த மாநில சுகாதாரத் துறையும் உஷார் நிலையில் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு என்னும் விரல் ரேகை மூலம் வருகைப் பதிவு செய்யும் முறைக்கு, அம்மாநில அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. 

 முன்னதாக, தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிபிஎஸ்இ இறுதியாண்டுத் தேர்வில், தேர்வெழுத வரும் மாணவர்கள் முகக் கவசம் அணிந்து வர அனுமதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Last Updated : Mar 5, 2020, 5:33 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.