ETV Bharat / bharat

'கோட்டக் மகேந்திரா' வங்கியின் தலைவர் மீது பண மோசடி வழக்கு!

டெல்லி: கோட்டக் மகேந்திரா வங்கியின் தலைவர் உதய் கோட்டக் உட்பட ஆறு பேர் மீது பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உதய் கோட்டக்
author img

By

Published : Oct 20, 2019, 1:15 PM IST

டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் பூபேந்திர பாக்லா என்பவர் அளித்த புகாரின் பேரில், கோட்டக் மகேந்திரா வங்கித் தலைவர் உதய் எஸ் கோட்டக் உட்பட ஆறு பேர் மீது, பணம் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோட்டக் மகேந்திரா வங்கியில் பூபேந்திர பாக்லா ரூ.50 லட்சம் கடன் வங்கியிருந்தார். அதைத் தொடர்ந்து கோட்டக் வங்கியின் பங்குதாரரான விரேந்திர ஷர்மா என்பவர், தனக்கு சொந்தமான சொத்தை பூபேந்திர பாக்லா, கோட்டக் வங்கிலேயே அடமானம் வைத்து பணத்தை பெற்றுள்ளார், என்று டெல்லி காவல்துறை ஆணைரிடம் புகார் அளித்திருந்தார்.

இது குறித்த வழக்கு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாராணைக்கு வந்தது. அப்போது, பூபேந்திர பாக்லா நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் வங்கியும், விரேந்திர ஷர்மாவும் இணைந்து கோஜன்ட் வென்ச்சர் என்னும் நிறுவனத்திற்கு பாதுகாப்பு இல்லாத கடன் திட்டத்தின் கீழ், 50 லட்சம் ரூபாயை கடனாக பூபேந்திர பாக்லாவின் ஆவணங்களை வைத்து அளித்துள்ளனர்.

ஆனால், அதற்கான கணக்கை பாக்லா பெயரில் வழங்கப்பட்டதாக காண்பித்து மோசடியில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் ஊர்ஜிதமாயிற்று. இதையடுத்து பூபேந்திர பாக்லா, கோட்டக் மகேந்திரா வங்கி மீது தொடர்ந்த வழக்கில் அதன் தலைவர் உதய் உட்பட ஆறு பேரிடம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் முக்கிய செய்தி: 'பாகிஸ்தான் எனும் பெயரை மாற்ற வேண்டும்' - பிகார் மாநில கிராம மக்கள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.