நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும் பரவலை கட்டுக்குள் கொண்டுவருவது சவாலான காரியமாகவே உள்ளது.
இந்நிலையில், தனது செயலாளருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்ட தென்-மேற்கு மாவட்ட நீதிபதிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.
டெல்லியில் உள்ள தென்-மேற்கு மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் உதவியாளருக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த ஞாயிற்றுக் கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதனால், தலைமை நீதிபதி தன்னைதானே தனிமைப்படுத்திக்கொண்டார்.
இதனைதொடர்ந்து, தலைமை நீதிபதி உள்பட நீதிமன்ற அலுவலர்கள் 17 பேரின் ரத்த, சளி மாதிரிகள் வைரஸ் தொற்று பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. இதில், தலைமை நீதிபதிக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. மற்ற அலுவலர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
இதனால், நீதிமன்ற வளாகம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அந்நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுவரை டெல்லியில் 99 பகுதிகள் கரோனா பரவலை தடுக்கும் விதமாக தனிமைப்படுப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பார்க்க: கரோனா இல்லாததால் மருத்துவமனைகளை மூடும் சீனா