குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானவர்களை நோக்கி கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி கபில் பிஸ்லா என்ற நபர் தூப்பாக்கியால் சுட்டார். எதிர்பாராதவிதமாக இந்நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
அங்குக் கூடியிருந்த நபர்களை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எழுப்பிய கபில் பிஸ்லா, இந்த நாடு இந்துகளுக்கு மட்டுமே, வேறு யாருக்கும் இடமில்லை என்று முழக்கமிட்டார்.
கைது செய்யப்பட்ட கபில் பிஸ்லா தனக்கு பிணை வேண்டி அளித்த மனுவை டெல்லி நீதிமன்றம் விசாரித்தது. கபில் பிஸ்லாவின் வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தைக் கேட்ட நீதிமன்றம் தரவுகள், சூழலை கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்கியுள்ளது. கபில் பிஸ்லா இதற்கு முன் குற்றப் பின்னணி ஏதும் இல்லை எனத் தெரிவித்த அவரது வழக்கறிஞர் நீதியின் பிடியிலிருந்து அவர் விலகமாட்டார் என உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து டெல்லி நீதிமன்ற நீதிபதி குல்ஷன் குமார், கபில் மிஸ்ராவை பிணைத்தொகை 25 ஆயிரம் ரூபாய் செலுத்த உத்தரவிட்டு பிணை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: டெல்லி கலவரம்: வாழ்க்கையை முடித்த வதந்தி.!