கரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை உலக நாடுகளில் இந்நோய்த் தொற்றால் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், இந்தியாவில் மட்டும் கரோனா தாக்குதலால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, டெல்லியில் மட்டும் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 1078 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இரண்டாயிரத்து 182 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 201 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனா: நாட்டில் ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்புகள்