டெல்லியின் முக்கிய பகுதிகளில் ஒன்று சாந்தினி சவுக். இந்தப் பகுதியில் பல காலமாக இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இதனை சீர்குலைக்கும் விதமாக ஒரு சிலர் அப்பகுதியில் உள்ள கோயிலை ஜூன் 30ஆம் தேதி சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதி கடந்த மூன்று நாட்களாக பதற்றத்துடன் காணப்படுகிறது.
மீண்டும் இரு பிரிவினரிடையே நல்லுறைவைக் கொண்டுவர இரு தரப்பு தலைவர்களும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதிக்கான குழுவை உண்டாக்கி கோயிலை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன. ஆனால் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெறுப்புணர்வை விதைத்து அமைதியை சீர்குலைக்கும் விதமாக செயல்படுகிறார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கோயிலைச் சேதப்படுத்திய மூவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.