குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற போராட்டம் திடீரென்று வன்முறையாக மாறியது. இந்த வன்முறை சம்பவத்தால் தலைநகர் டெல்லி போர்க்களம் போல் காட்சியளித்தது. இச்சம்பவத்தால் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். நிலைமை கட்டுக்குள் கொண்டுவர வன்முறையில் ஈடுபடுவோரை உடனடியாகத் துப்பாக்கியால் சுடவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், வன்முறையில் படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அதில், பலரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவருகின்றனர்.
அந்த வகையில், ஜிடிபி (குரு தேக் பகதூர்) அரசு மருத்துவமனையில் 38 பேர், லோக் நாயக் மருத்துவமனையில் மூன்று பேர், ஜக் பர்வேஷ் சந்தர் மருத்துவமனையில் ஒருவர், டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் நான்கு பேர் என மொத்தம் 46 நபர்கள் வடகிழக்கு டெல்லி வன்முறையில் உயிரிழந்துள்ளதாக அந்தந்த மருத்துவமனை வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: அவைத்தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் தொடக்கம்