நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்தத் தொற்றின் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக டெல்லியில் மூடப்பட்டிருந்த பல முக்கிய நினைவுச்சின்னங்கள் மீண்டும் பார்வையாளர்களுக்காக திறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அரசு அலுவலர் ஒருவர் கூறுகையில், "டெல்லியில் 173 நினைவுச்சின்னங்கள் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இதில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள், செங்கோட்டை, ஹுமாயூன் கல்லறை, குதுப் மினார், சப்தர்ஜங் கல்லறை, புராணா குய்லா, துக்ளகாபாத் கோட்டை மற்றும் ஃபிரோஸ் ஷா கோட்லா ஆகியவையும் அடங்கும்.
டெல்லியின் ஏஎஸ்ஐ பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் மட்டும் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் இரண்டு இடங்களிலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். காலை ஸ்லாட்டில் காலையில் தொடங்கி நண்பகலில் வரை டிக்கெட் பெறலாம்.
மற்றொரு ஸ்லாட்டில் மதியம் முதல் மாலை 6 மணி வரை டிக்கெட் பெற முடியும். ஒவ்வொரு இடத்திலும், அதிகபட்சம் 1,500 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தகுந்த இடைவேளி, கிருமிநாசினி சுத்திகரிப்பு நடவடிக்கைகள் உள்பட அனைத்து வழிகாட்டுதல்களும் இந்த தளங்களில் பின்பற்றப்படும்.
குறிப்பாக முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க படுவார்கள்" என்றார்.
இதையும் படிங்க: 'ராகுல் காந்தி தொடர்ந்து தேசத்தை இழிவுப்படுத்துகிறார்'- ஜேபி நட்டா