டெல்லியில் காற்றின் மாசு நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி அபாய நிலையை அடைந்ததைத் தொடர்ந்து, அங்கு பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு கட்டட வேலைகள் மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
சுவாசிப்பதற்குகூட சிரமப்படும் மக்கள், காசியாபாத்தில் முகமூடி அணிந்து கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டனர். நவம்பர் 5ஆம் தேதிவரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அலுவலங்களின் பணி நேரத்தை தளர்த்த டெல்லி அரசு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளில் விவசாய நிலங்களில் சுள்ளிக்கட்டைகள் வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால்தான் காற்றின் மாசு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. பனிக்காலம் முழுவதும் பட்டாசுகள் வெடிக்கவும் அங்கு தடைவிதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: டெல்லியில் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!