எல்லைப் பகுதிகளில் நடந்து வரும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பற்றிய ஆலோசனைக் கூட்டம் இரண்டு நாள்களுக்கு முன்னதாக டெல்லியில் நடந்தது. பாதுபாப்புத் துறை ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், எல்லை சாலை நிறுவனத்தின் தலைவர் ஹர்பால் சிங் பங்கேற்று, எல்லைப் பகுதிகளில் செய்யப்பட்டு வரும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பற்றி விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து இன்று ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஆறு பாலங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதில் அக்நூர் பகுதியில் நான்கு பாலங்களும், ராஜ்பூரா பகுதியில் இரண்டு பாலங்களும் அடங்கும். இந்தப் பாலங்கள் அனைத்தும் 100 முதல் 300 மீட்டர் தூரம் வரை கட்டப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 45 கோடியாகும்.
ஜம்மு - காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் எல்லையில் உள்ள நெடுஞ்சாலை பணிகளுக்காக ஜூன் மாதத்தில் மத்திய அரசு எல்லை சாலைகள் நிறுவனத்திற்கு கூடுதலாக ரூ. 1691 கோடி வழங்க ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் சிறப்பு உதவித் திட்டம் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை!