ETV Bharat / bharat

ஆராய்ச்சி, கணக்கெடுப்பு நிறுவனங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கும் இணையதளம் தொடக்கம்!

டெல்லி : இந்திய நீர்நிலைப் பகுதிகள், மண்டலங்களில் ஆராய்ச்சி, கணக்கெடுப்பு , ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கும் இணையதளத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்துள்ளார்.

rajnath singh
rajnath singh
author img

By

Published : Jun 29, 2020, 8:17 PM IST

இந்திய பிராந்திய நீர் நிலைகள், மண்டலங்களில் ஆராய்ச்சி, கணக்கெடுப்பு, ஆய்வு தொடர்பான மின் திட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்களுக்கு தடையில்லா சான்றிதழ்களை (NOC) வழங்குவதற்கான இணையதளத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

இந்த சான்றிதழ்களை வழங்கும் ஆன்லைன் தளமானது விரைந்து செயல்படும்படியும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஏற்கனவே, வான்வழி நடவடிக்கைகளுக்கு NOC வழங்க வலைதளம் ஒன்று உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த இணைதள வெளியீட்டின்போது ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவனே, கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், விமானப்படைத் தலைவர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதெளரியா ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 3,949 பேருக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.