ETV Bharat / bharat

ராணுவ வீரர்களுடன் உரையாடிய பாதுகாப்புத் துறை அமைச்சர் - இந்திய சீன மோதல்

எல்லைப் பகுதிக்கு சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து ராணுவ வீரர்களிடம் கேட்டறிந்தார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர்
பாதுகாப்புத்துறை அமைச்சர்
author img

By

Published : Jul 17, 2020, 6:04 PM IST

இந்திய, சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், எல்லைப் பகுதியான லேவுக்கு சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து அறிந்து கொள்ள ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி நரவனே ஆகியோர் சென்றனர். பின்னர், லுகுங் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களை சந்தித்து அவர் பேசினார்.

ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர்

ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய ராஜ்நாத், "கல்வான் பள்ளாத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில், எல்லைப் பகுதியை பாதுகாக்கும் நோக்கில் நமது வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், அவர்கள் இழப்பு எனக்கு சோகத்தை தருகிறது. அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என்றார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர்
பாதுகாப்புத்துறை அமைச்சர்

ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த T - 90 வகை டாங்கிகள், BMP காலாட்படை போர் வாகனங்கள் அணிவகுத்தன .

பாதுகாப்புத்துறை அமைச்சர்
பாதுகாப்புத்துறை அமைச்சர்

பின்னர், ராணுவ வீரர்கள் சாகசங்களை செய்து காட்டினர். முன்னதாக, பிரதமர் மோடி, ஜூலை 3ஆம் தேதி, எல்லைப் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர்

லடாக்கிலிருந்து, ஸ்ரீநகர் செல்லும் ராஜ்நாத், உயர் மட்ட ராணுவ அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராணுவ வீரர்களுடன் உரையாடிய பாதுகாப்புத்துறை அமைச்சர்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இதையும் படிங்க: ராணுவ வீரர்களின் தயார் நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.