குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டைக்குச் சென்ற போராட்டக்காரர்கள், அங்கிருந்த கம்பத்தில் ஏறி சீக்கியர்களின் கொடியை ஏற்றினர்.
இந்தச் சம்பவத்தை பஞ்சாப் நடிகர் தீப் சிங் சித்து, தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்தார். நடிகர் தீப் சிங் சித்தின் செயல் வன்முறையைத் தூண்டும்வகையில் அமைந்திருந்ததாக குற்றஞ்சாட்டி, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அவருக்கு அழைப்பாணை அனுப்பியது.
மேலும், அவர் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானமாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என டெல்லி காவலர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று, நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டார். இதனை டெல்லி காவலர்கள் உறுதிசெய்துள்ளனர்.
இதையும் படிங்க: அஸ்ஸாமில் சட்டவிரோத ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்!