இந்த உணவகத்துக்கு வரும் ஏழைகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால், அதற்குப் பதிலாக அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. அக்டோர் 9ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த கார்பேஜ் கஃபேயில், ஒரு கிலோ கிராம் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வரும் அனைவருக்கும் மிக சுவையான உணவுகள் பரிமாறப்படுகின்றன.
இதன் மூலம் தினமும் சுமார் 10 முதல் 12 கிலோ வரையிலான பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இங்கு சேகரிக்கப்டும் கழிவுகள் மாநகராட்சிக்குச் சொந்தமான மறுசுழற்சி மையத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், அம்பிகாபூர் மாநகராட்சி சாலைகள் அமைக்கப் பயன்படுத்தப்படுகிறது.
ஈடிவி பாரத்தின் செய்தியாளர்கள் இந்த உணவகத்துக்கு சென்றபோதுதான், இங்கு வழங்கப்படும் சிறப்பான சேவையை உணர முடிந்தது. இங்கிருக்கும் உள்ளூர் குழந்தைகள் கூட, பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்துவிட்டு அதற்குப் பதில் அறுசுவை உணவை சுவைக்கின்றனர்.
பிளாஸ்டிக் இல்லா தேசம் படைப்பது குறித்து பெரும் விழிப்புணர்வை இந்த உணவகம் ஏற்படுத்தியுள்ளது. தேவையானவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவரும் இந்த உணவகத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்துவிட்டு, இலவசமாக சாப்பிடலாம் என்பதே இந்த உணவகத்தின் சிறப்பு.
இங்கு குப்பைகள் சேகரிப்பவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரும், பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்க தங்கள் பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் கழிவுகளுக்கு இலவச உணவு வழங்கும் புபனேஷ்வர் மாநகராட்சி!