உத்தரப்பிரதேச மாநிலம், லலித்பூரில் உள்ள ஜாகோரா நகரில் குரே அஹிர்வார் என்ற 40 வயது விவசாயி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.
விவசாயி குரே அஹிர்வார், பண நெருக்கடியில் இருந்ததாகவும், தனது மகளின் திருமணத்திற்காக கடந்த ஆண்டு இரண்டரை லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும் விவசாயியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இறந்தவரின் மைத்துநர் தயாராம், அஹிர்வாரின் கடன் பிரச்னையே அவரின் தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.
அவரது உடல் உடற்கூறு ஆய்விற்குப் பின்னர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.