வட கிழக்கு டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானப் போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. இதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47லிருந்து 53ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக இதுவரை 369 முதல் தகவல் அறிக்கைகள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 1,284 பேர் வன்முறை தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறை குறித்த தவறான தகவல்கள் பகிர்வது குறித்து தெரிய வந்தால் காவல் துறையினருக்கு தெரிவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 16 அவசர உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவானவர்களும், எதிரானவர்களும் மோதிக் கொண்ட சம்பவம் வன்முறையாக வெடித்தது. பிப்ரவரி 24ஆம் தொடங்கிய கலவரம் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு நடைபெற்றது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதற்கு இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'டெல்லி போன்ற கலவரங்கள் அரசியல் நோக்கங்கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டது' - கபில் சிபல்