இந்தியாவில் கரோனா வைரஸின் பிறப்பிடமாக கேரளா இருந்தாலும் அதன் மையப்பகுதியாக மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் மாறியுள்ளன. மேற்கூறிய மூன்று மாநிலங்களில் தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், நாட்டில் நேற்று ஒரேநாளில் புதிதாக 5,609 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியான நிலையில் 132 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,359ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,435ஆகவும் அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 3002 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45,300ஆக அதிகரித்துள்ளது. இதனால் தற்போது 63,364 பேர் கரோனாவுக்காக சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கரோனா வைரஸால் கண்டறியப்பட்ட 5,609 பேர்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 2161 பேர் அடங்குவர். இதன்மூலம், மகாராஷ்டிராவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,297ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 10,318 பேர் குணமடைந்த நிலையில், 1390 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான பட்டியலில் தமிழ்நாடு (13,191) இரண்டாம் இடத்திலும், குஜராத் ( 12,537) மூன்றாம் இடத்திலும் உள்ளது.
இதையும் படிங்க: இன்று முதல் விமான டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறதா?