நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கருணை மனு நிலுவையில் இருந்த காரணத்தால் தூக்க தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தூக்கு தண்டனைகள் காலதாமதமாக நிறைவேற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, காதலருடன் சேர்ந்து தனது குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை பெண் ஒருவர் கொலை செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.
தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே, நீதிபதிகள் எஸ். ஏ. நசீர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வு இந்த வழக்கை விசாரித்தபோது, நீதிமன்றங்களும் நீதிபதிகளும் சட்டத்தின்படியே செயல்பட வேண்டும். அவர்களுக்கு சமூக பொறுப்பு உண்டு. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். தூக்கு தண்டனைக்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் மேல் முறையீடு செய்யலாம் என்ற எண்ணம் குற்றவாளிகளுக்கு இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்தது.
மேலும், காதலர்களின் மறு சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: ஊழலில் இந்தியாவுடன் போட்டிபோடும் சீனா!