உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் சவ்ரா நகரில் வீட்டில் தனியாக இருந்த காது கேளாத சிறுமியை அவரது சகோதரனின் நண்பர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
அந்தத் தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி பிந்து சாஹ்னி என்பவரைத் தேடிவந்தனர். இந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹர்தாஸ் பாலியல் வன்புணர்வு வழக்கு: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!