ETV Bharat / bharat

தனி ஒருவனாக சைக்கிளில் புறப்பட்ட இளைஞன்: மணக்கோலம்பூண்டு டபுள்ஸில் ரிட்டனான கதை!

author img

By

Published : May 1, 2020, 2:00 PM IST

லக்னோ: நூறு கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்த இளைஞர் திரும்பவருகையில் மணக்கோலத்தில் மனைவியுடன் வந்து கிராம மக்களை வியப்பில் ஆழ்த்திய நிகழ்வு உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

்ே்
ே்ே்ே்

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள பவுத்தியா கிராமத்தைச் (Pauthiya village) சேர்ந்த கல்கு பிரஜாபதி (Kalku Prajapati), விவசாயம் செய்துவருகிறார். இவருக்கும் மஹோபா மாவட்டம் (Mahoba district) புனியா கிராமத்தில் (Puniya village) வசிக்கும் ரிங்கி என்ற பெண்ணுக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்த முடிவுசெய்தனர்.

அதன்படி, இவர்களின் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கரோனாவால் அமலுக்கு வந்த ஊரடங்கு கல்கு - ரிங்கியின் திருமண ஆசைக்கு முற்றுப்புள்ளிவைத்தது.

திருமணத்திற்கான அனுமதியும் காவல் நிலையத்தில் கிடைக்காத காரணத்தினால், விரக்தியடைந்த கல்கு, தனது துணையைக் கரம்பிடிக்க முடிவுசெய்தார். ஆனால், அவரிடம் இருசக்கர வாகனம் இருந்தும் ஓட்டுநர் உரிமம் இல்லாத காரணத்தினால் சைக்கிளில் புறப்பட்டார்.

கரோனாவிலிருந்து முகத்திரை அணிந்தபடியே சுமார் 100 கி.மீ. தொடர்ந்த அவரின் சைக்கிள் பயணம், ரிங்கி வீட்டு வாசலில் சென்று முடிவடைந்தது.

ே்ே்
கல்கு - ரிங்கி தம்பதி

இதையடுத்து, புனியா கிராமத்தில் உள்ள கோயிலில் எளிய முறையில் முகத்திரைகள் அணிந்தபடி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். கல்கு திருமணம் செய்த கையோடு, அதே சைக்கிளில் மனைவியை ஏற்றிக்கொண்டு தனது கிராமத்திற்குப் புறப்பட்டு வீடுபோய் சேர்ந்தார். இவரது இந்த முடிவால் அவரது கிராம மக்கள் வாயடைத்துப்போய் வியப்பில் ஆழ்ந்தனர்.

இது குறித்து மணமகன் கல்கு கூறுகையில், "சைக்கிளில் 100 கிலோ மீட்டர் வந்ததை எனது கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. கால்களில் ஏற்பட்டுள்ள வலிக்கு கண்டிப்பாக மாத்திரை போட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எங்கள் திருமணத்தால் இரு வீட்டாரும் மகிழ்ச்சியாக உள்ளனர். என்னால் ஊரடங்கு தளர்த்தும்வரை காத்திருக்க முடியவில்லை. என்னுடைய தாயாருக்கு உடல்நிலை மோசமாக உள்ளது. வீட்டில் சமைக்கவும் ஆள் இல்லை என்பதாலே அவசரமாகத் திருமணம்செய்தேன்" என்றார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளியைச் சுத்தப்படுத்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.