ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி) தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, இரண்டாயிரத்து 100-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்று(டிச.01) நடைபெறுகிறது. இதில், 321 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதுதொர்பாக பேசிய மாநிலத் தேர்தல் ஆணையர் கே.கே.சர்மா, "இரண்டாம் கட்டத் தேர்தலில் மொத்தம் 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், காஷ்மீரில் 25 மற்றும் ஜம்முவில் 18 தொகுதிகள் உள்ளன. 43 தொகுதிகளில், 321 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவற்றில் 196 காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், 125 ஜம்மு பிராந்தியத்திலும் களம் காண்கின்றனர். கரோனா தொற்றுப் பரவலைக் கருத்தில்கொண்டு வாக்குப்பதிவிற்காக 2,142 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 7.90 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். காஷ்மீரில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் பதற்றம் நிறைந்தவைதான். பள்ளத்தாக்கிலுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைதியாக தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆன்லைனில் ஏழு கோடி ரூபாய் வரை மோசடி- நான்கு பேர் கைது!