ETV Bharat / bharat

கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி!

டெல்லி: கரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதாகக் கருதப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ஃபாவிபிராவிர்(Favipiravir) தயாரிக்கவும் விற்பனை செய்யவும் இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி!
கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி!
author img

By

Published : Jun 21, 2020, 4:48 PM IST

கரோனா வைரஸ் குறித்த சிறப்பு நிபுணர் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இந்தியாவில் லேசான மற்றும் மிதமான கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க க்ளென்மார்க் மருந்து தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஃபாவிபிராவிர் மருந்து தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

" கரோனா வைரஸால் லேசான மற்றும் மிதமான பாதிக்கப்புக்கு உள்ளாகியுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, வைரஸ் தடுப்பு மருந்தை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் செய்ய க்ளென்மார்க் மருந்து தயாரிக்கும் நிறுவனம், இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு தலைமையத்திடமிருந்து ஒப்புதலைப் பெற்றுள்ளது" என்று அந்நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

34 மாத்திரைகள் கொண்ட ஃபாவிபிராவிரின் ஒரு அட்டையின் மதிப்பு ரூ .3,500 ஆகும். கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி இந்த மருந்துகளை இரண்டு வாரங்களில் 122 மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு முதலில் மருந்து உட்கொண்ட 1000 நோயாளிகளைக் கண்காணிக்கவும் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. ஃபாவிபிராவிர், ஜப்பானில் இன்ஃப்ளூயன்ஸாவிற்கான சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வைரஸ் தடுப்பு மருந்து என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 9,130 கரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர், இந்த வைரஸ் பெருத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 54.13 விழுக்காட்டினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாடு முழுவதும் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 269 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள 974 கரோனா வைரஸ் பரிசோதனை மைதானங்கள் மூலம் இதுவரை 66 லட்சத்து 16 ஆயிரத்து 496 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.