தசரா பண்டிகையை முன்னிட்டு டெல்லி ராம் லீலா மைதானத்தில் நாடக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து பேசிய மோடி, 'இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக தசரா பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இதே நாளில் இந்தியா வான் படை தினமும் அனுசரிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியா பண்டிகை கொண்டாடுவதற்கு பெயர் போன நாடாகும். நம் நாட்டில் பெண்களைத் தெய்வமாக போற்றி வருகிறோம். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பெண்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். மக்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் இருக்கும் மகள்களுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்வோம்.
மேலும் இதை கடைப்பிடிக்கும் வகையில் வருகின்ற தீபாவளி பண்டிகையில் பெண்களின் சாதனை குறித்தும் கொண்டாடுவோம். இதைதான் தாம் சென்ற மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினேன்’என்றும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: 49 பேர் மீது தேச துரோக வழக்கு - பிரதமருக்கு கடிதம் எழுதிய சசி தரூர்
மேலும் பார்க்க: நவராத்திரி விழாவை கண்டுகளித்த பிரதமர் மோடி!