ETV Bharat / bharat

பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு: லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) டி.எஸ். ஹுடா கருத்து! - Lt Gen (Retd)

இந்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத் துறைக்கான அம்சங்கள் குறித்து லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) டி.எஸ். ஹுடா கருத்து தெரிவித்துள்ளார்.

hooda
hooda
author img

By

Published : Feb 7, 2020, 7:46 PM IST

நமது நாட்டின் பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கு நிதி ஒதுக்குவதில் சமீப ஆண்டுகளாக நீடித்த ஒரு ஒற்றுமை இருப்பதை காணமுடிகிறது. பட்ஜெட்டில் ராணுவத்துக்கான ஒதுக்கீடு என்பது மற்ற ஒட்டு மொத்த துறைகளுக்கு ஒதுக்கப்படுவது போல, ஆண்டுதோறும் சிறிதளவே கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)யில் ஏற்பட்டுள்ள சரிவு, வருவாய் செலவீனங்கள் அதிகரிப்பு, கூடுதல் மூலதன ஒதுக்கீடு போன்ற காரணங்களால், பாதுகாப்புத் துறையில் நவீனமயமாக்கல் என்பதை கடுமையாக தடுக்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதே அரசின் தலையாய கடமை என தமது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய போதும், ராணுவத்துக்கு தேவைப்படும் நிதி ஒதுக்கீடு என்பதை செயலில் காட்டாமல் சிறிதளவே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

நமது ராணுவத்தில் நவீனமாக்கல் தொடர்பான இரு பார்வைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகிலேயே ராணுவத்துக்கு அதிக செலவு செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 4-ம் இடத்தில் உள்ளது .மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒரு சதவீதத்திற்கும் குறைவாக ஒதுக்கீடு செய்யும் நிலையில் உள்ள ஒரு நமது நாடு, அதுவும் பொருளாதார மந்த நிலையில் இருக்கும் போது தலா 1,600 கோடி ரூபாய் செலவில் ரபேல் ஜெட் விமானங்களை பெருமளவில் வாங்கிக் குவித்து பணத்தை இறைப்பது என்பது சரியானதாகப் படவில்லை .

நம் நாட்டில் 50 மில்லியன் (5 கோடி) மக்கள் மாத வருமானம் ரூ.4200 என்ற ரீதியில் வறுமைக்கோட்டுக்கும் மிகக் கீழே வாழ்க்கை நடத்தும் அவலநிலை உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான ஒரு புள்ளி விபரப்படி, கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 30 மில்லியன்(3 கோடி) மக்கள், நமது அரசு நிர்ணயித்துள்ள வறுமைக்கோட்டு பட்டியலில் கூடுதலாக இணைந்து ஏழைகளாகியுள்ளனர். இப்படி ஒரு மோசமான நிலைமையில் ராணுவ ஆயுதங்களை குவிப்பதில் முன்னுரிமை வழங்கினால் வறுமையை எப்படி ஒழிப்பது?

மற்றொரு பார்வையில் பார்த்தால், பாதுகாப்பு அச்சுறுத்தலில் உள்ள ஒரு நாடு, அந்த நாட்டின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு ராணுவத்துக்கு உரிய நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. இன்றைய நிலையில், உலகிலேயே அசாதாரண சூழல் நிலவும் பகுதிகளில் ஒன்றாக தெற்காசிய பிராந்தியம் திகழ்கிறது. இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ள நாட்டுடன் (பாகிஸ்தான்) அதிகரித்து வரும் பகைமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதே போல் வடக்கு எல்லையில் அதிபலம் மிக்க நாட்டை (சீனா) சமாளிக்க வேண்டியுள்ளது. இந்த இரு எதிரி நாடுகளுடனான விரோதப் போக்கு எதிர்வரும் காலங்களிலும் தொடரத்தான் செய்யும்.

அடுத்த பத்தாண்டுகளில் ராணுவ ரீதியில் நாம் பாகிஸ்தானை எதிர்கொள்வது எளிதாகிவிடும் என்று கூறலாம். ஆனால் சீனாதான் நமக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கப் போவது கவலையளிப்பதாக உள்ளது.சீனாவின் தற்போதைய ராணுவ பட்ஜெட் 250 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற ரீதியில் நம்மை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.வரும் காலங்களில் இந்த வித்தியாசம் மேலும், மேலும் அதிகரிக்கவே செய்யும். ஐரோப்பிய குழு ஒன்றின் ஆய்வுப்படி, 2030-ம் ஆண்டில் இந்தியாவின் ராணுவச் செலவு 213 பில்லியன் அமெரிக்க டாலராகவும், சீனா செலவு செய்வதோ 736 பில்லியன் அமெரிக்க டாலராகவும் அதிகரிக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. இதன்படி பார்த்தால் இரு நாடுகளுக்கு இடையேயான வித்தியாசம் 500 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலாகும்.

இப்படி சீனா ராணுவ செலவை அதிகரிப்பது நல்லதற்கல்ல என்பதை நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம். வர்த்தகம் மற்றும் தொழில் நுட்பத் துறையில் அமெரிக்காவும் சீனாவும் ஏற்கனவே போட்டி போட்டு சர்வதேச சந்தையை புரட்டிப் போட்டு வருகின்றன. இந்தப் போட்டியில் இந்தியாவின் நிலைமை ஊசலாட்டத்தில் தான் உள்ளது. எனவே இந்தியாவும் உலக அளவில் பெரிய சக்தியாக உருவெடுக்க தன்னுடைய மென்மையான அணுகுமுறைகளை கைவிட்டு தானும் மிகப் பெரிய சக்தி தான் என்பதை உணர்த்த வேண்டியது உள்ளது.

இந்த இரு வேறுபாடான பார்வைகளை நாம் சரி செய்யப் போவது எப்படி? என்ற கேள்வி எழுகிறது. ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதிக் குறைவால், அதற்குள் சமாளிப்பதில் பல சிரமங்களை தொடர்ந்து சந்தித்து வரும் நிலை உள்ளது. ராணுவத்தினருக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவு மிக அதிகம் என்பது போல் பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய சூழலில் ஊதியத்தில் கை வைக்க முடியாது. ஆனால் ராணுவம் போன்ற முற்றிலும் வித்தியாசமான ஒரு துறையில், திறனை அதிகரிக்க பணிச்சூழலை மேம்படுத்த வேண்டும். அமெரிக்க ராணுவத்தில், பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் ராணுவத்தினரின் ஊதியம் மற்றும் அவர்களின் நலனுக்காகவே செலவிடப்படுகிறது. அதே போன்று ஓய்வு பெற்றவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. உயிரை துச்சமாகக் கொண்டு நாட்டுக்காக பாடுபடும் வீரர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியது அவசியமான ஒன்று. பிற நாடுகளை ஒப்பிடுகையில் நம் நாட்டில் ராணுவத்தில் பணிபுரிந்தோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் என்பது சுமார் ரகம் தான்.

எனவே நமது முப் படைகளின் ஒட்டு மொத்த அமைப்பில் போதிய கவனம் செலுத்துவது தான் இதற்கு தீர்வு . ராணுவத்தில் 40 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தில் என்னுடைய கருத்து என்னவெனில், இந்தத் துறையில் மனித ஆற்றலை குறைப்பது தொடர்பாக ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். நமது முப்படைகளிலும் ஆயுத தளவாடங்கள் கையாள்வது, பயிற்சிகள் அளிப்பது மட்டுமின்றி போர் நடவடிக்கைகளிலும் பெரும்பாலானவை விமானப்படை போன்று ஒரே மாதிரி அமைந்துள்ளன. இந்த குறைபாடுகளை கண்டறிந்து ஆட் குறைப்பு செய்ய புதிதாக பொறுப்பேற்றுள்ள ராணுவ தலைமை தளபதி கவனம் செலுத்தியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

இது போல், ராணுவத்தின் சில பிரிவுகளில் இட ஒதுக்கீடு போல் ஆட்களை பங்கீட்டு கொள்வதன் மூலம் ஆட்கள் தேவையை மிச்சப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் விமானப் படை மற்றும் கடற்படைகள் தங்களின் லட்சியத் திட்டங்களான 44 ஸ்குவாட்ரான் போர்க் கப்பல் அல்லது 200 கடற்படை கப்பல் கட்டும் திட்டம் குறித்து திரும்பவும் யோசிக்க வேண்டியது அவசியம். தற்போது ராணுவத்தின் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற பெரிய திட்டங்களுக்கு கூடுதல் செலவிடுவது என்பது எட்ட முடியாத ஒன்று. இந்தியாவுக்கு மட்டுமே இது போன்ற பிரச்னைகள் என்றில்லை. அமெரிக்காவுக்கும் இப்படித்தான் பிரச்னை உள்ளது. அந்நாடு ஆண்டுக்கு 750 பில்லியன் டாலரை ராணுவத்துக்கு செலவிட்டாலும், அந்நாட்டு கடற்படையில் 1987-ல் 600 போர்க் கப்பல்கள் இருந்த நிலையில், தற்போதைய பலம் 300 கப்பல்களுக்கும் கீழ் என்ற நிலைக்கு மூழ்கி விட்டது. அது போல் வளைகுடா போரின் போது, அமெரிக்க விமானப்படையில் 70 ஸ்குவாட்ரன் சண்டைப் பிரிவுகள் வலுவாக இருந்த நிலையில் இப்போது 32 ஸ்குவாட்ரன் பிரிவுகள் தான் உள்ளன.

இதுபோல் நமது ராணுவத்திலும் எண்ணிக்கையை குறைக்கும் பட்சத்தில் பலவீனமாகிவிடாதா? என்று விவாதங்கள் எழலாம். ஆனால் அது ஒரு பெரிய விஷயமல்ல. பெரிய படைபலத்தைக் காட்டிலும், நல்லதிறன் படைத்த, அதி நவீன ஆயுதங்கள் வைத்துள்ள படையின் பலம் சிறிதாயினும் அதன் பலன் பெரிது. இதற்கு சீனாவை உதாரணமாக கொள்ளலாம்.அந்நாடு 2015 முதல் தனது படைபலத்தில் 3 லட்சம் பேரை படிப்படியாக குறைத்தாலும் அந்நாட்டு ராணுவம் பலவீனம் அடைந்து விடவில்லை. எந்த நேரத்திலும் அந்நாட்டின் PLA (Peoples Liberation Army) எனப்படும் மக்கள் விடுதலை ராணுவம் எந்த விதமான போரையும் சந்திக்கும் திறன் படைத்ததாகவே விளங்குகிறது.

Intro:Body:

 D S Hooda Lt Gen (Retd) On defense budget 

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.