ETV Bharat / bharat

வாயு புயல் - குஜராத்திற்கு ரெட் அலர்ட் - ரெட் அலர்ட்

காந்திநகர்: அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் நாளை அதிகாலை, குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்பதால் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

vaayu
author img

By

Published : Jun 12, 2019, 6:45 PM IST

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல், குஜராத் மாநிலத்தின் போர்பந்தர், மஹீவா பகுதியில் நாளை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலானது 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாக கூறப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 165 கி.மீ வேகத்தில் வரை காற்று வீசும். இச்சமயத்தில் அரபிக் கடலை ஒட்டிய கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

vaayu
புயல் குறித்த படம்

புயலின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து புயல் தாக்கும் பகுதிகளில் இருந்து மூன்று லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக நாளை முதல் நான்கு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புயலில் பாதித்த மக்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் ஐஏஎஃப் சி-17 விமானம் ஜாம்நகரில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.