ETV Bharat / bharat

1.9 கோடி குழந்தைகள் ஆம்பன் புயலால் பாதிப்பு - யுனிசெப் கவலை - ஆம்பன் புயல் பாதிப்பு மேற்கு வங்கம் ஒடிசா

ஹைதரபாத்: இந்திய-வங்க தேச எல்லையைக் கடுமையாகத் தாக்கியுள்ள ஆம்பன் புயல் காரணமாக சுமார் 1.9 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

UNICEF
UNICEF
author img

By

Published : May 23, 2020, 4:52 PM IST

வங்க கடலில் உருவான ஆம்பன் புயல் மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மட்டுமில்லாது வங்கதேசத்தையும் இந்தப் புயல் கடுமையாகத் தாக்கியுள்ளது. தீவிரமான புயல் பாதிப்புக்குள்ளான மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 1.6 கோடி குழந்தைகள் இந்தப் புயல் காரணமாக கடுமையான பாதிப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் சந்தித்திருக்கிறார்கள் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

யுனிசெப் அமைப்பு இரு நாடுகளின் நிலைமையும் தீவிரமாகக் கண்காணித்துவருகிறது. பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நோய்த்தொற்று காலத்தில், அந்த மக்களின் பாதுகாப்பை முறையாக உறுதிசெய்ய வேண்டும்.

சுமார் 8.5 லட்சம் ரோஹிங்கிய இஸ்லாமிய மக்கள் வங்க தேசம், இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளில் முறையான உறைவிடமின்றி அகதிகளாக உள்ளனர். தற்போதைய அசாதாரண சூழலில் இந்த மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது.

இரு நாட்டு அரசுகளும் தங்கள் குடிமக்கள் பாதுகாப்பில்தான் முதல் கவனம் செலுத்தும் நிலையில், அகதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய யுனிசெப் போன்ற தன்னார்வ அமைப்பு தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற சிறுமி - இவாங்கா ட்ரம்ப் நெகிழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.