டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாமல் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, பல தலைவர்கள் தங்களின் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். புது தலைவரை தேர்ந்தெடுக்காமல் மூத்தத் தலைவர்கள் தொடர்ந்து காலதாமதம் செய்துவருவதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் சந்தீப் தீக்சித் விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு ஆதரவாக மக்களவை உறுப்பினர் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட பல மூத்தத் தலைவர்கள் சந்தீப் தீக்சித் சொன்னதைதான் சொல்லிவருகிறார்கள். எனவே, கட்சியின் தலைவர் பதவிகளுக்கான தேர்தலை விரைந்து நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் எனக் காங்கிரஸ் செயற்குழுவை கேட்டுக் கொள்கிறேன்.
யாருக்காக எதற்காக வாக்களிக்க வேண்டும் என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு, பிரதேஷ் காங்கிரஸ் குழு ஆகியவைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என எட்டு மாதத்திற்கு முன்பே கோரிக்கைவிடுத்தேன். கட்சித் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடத்த வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அமல்படுத்தப்படுமா? - காங். தலைவர் பதில்