தமிழ்நாடு போன்றே புதுச்சேரியிலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரியில் கரோனா பரிசோதனை 500இல் இருந்து ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் அரசு சொல்லும் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல், கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்வு, துக்க நிகழ்ச்சிகளில் அதிகளவில் பங்கேற்கின்றனர். இதனால், கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது.
ஆகவே, வருகின்ற 12ஆம் தேதி மாநில பேரிடர் மேலாண்மை துறையுடன் ஆலோசனை நடத்தி கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் மாநில வருவாய் பாதிக்கப்பட்டாலும் கவலையில்லை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பகீர் கிளப்பும் அதிர்ச்சி தகவல்: 'அமைச்சர் விளக்கமளிப்பாரா?' - ஸ்டாலின் கேள்வி