ETV Bharat / bharat

மேகாலயாவில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தீவிரம்: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு! - குடியுரிமை போராட்டம் வடகிழக்கு மாநிலம்

ஷில்லாங்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் வட கிழக்கு மாநிலமான மேகாலயாவிலும் பரவியுள்ளதால், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Meghalaya
Meghalaya
author img

By

Published : Feb 29, 2020, 12:25 PM IST

Updated : Feb 29, 2020, 12:45 PM IST

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் இரு தரப்பினரிடையே மோதலாக வெடித்துள்ளது. இதையடுத்து அங்குள்ள ஆறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் தாக்கம் வடகிழக்கு மாநிலங்களில் கூடுதலாகவே உள்ளது. வடகிழக்கு, மேற்கு வங்க மாநிலங்களில் குடியேற்றம் மேற்கொண்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், இந்தச் சட்டம் அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, இச்சட்டத்திற்கு எதிராக அசாம் மாநிலத்தில் கடும் போராட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் இச்சட்டத்தால் அசாம் மக்களுக்குப் பாதிப்பில்லை என உறுதியளித்தார்.

தற்போது அசாமின் அண்டை மாநிலமான மேகாலயாவிலும் இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக காசி, ஜைனிதா மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள ஆறு மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது.

இதனைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு, இணைய முடக்கம் ஆகியவற்றை மேற்கொண்ட மாநில அரசு, நாளொன்றுக்கு 5 குறுஞ்செய்திக்கு மேல் அனுப்பக் கூடாது எனக் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் கே.எஸ்.யு. அமைப்பைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளதாகவும், காவல் துறையிலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: மும்பைக்கு மாத்தாதீங்க' போலீசிடம் கெஞ்சும் பிரபல தாதா!

Last Updated : Feb 29, 2020, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.