ETV Bharat / bharat

சிஆர்பிஎஃப் வீரர்களுக்காக பைக் ஆம்புலன்ஸ் அறிமுகம்! - ரக்ஷிதா

டெல்லி: மிக குறுகிய பாதைகளில் சென்று காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்ல ஏதுவாக பைக் ஆம்புலன்ஸ் 'ரக்ஷிதா' இன்று டெல்லியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

'RAKSHITA'
'RAKSHITA'
author img

By

Published : Jan 18, 2021, 5:47 PM IST

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இணைந்து 350 சிசி கொண்ட ராயல் என்பீல்டு பைக்கில் மினி ஆம்புலன்ஸ் வசதியை உருவாக்கியுள்ளனர். இதனை சிஆர்பிஎஃப் தலைமை அலுவலகத்தில் சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரல் ஏ.பி.மகேஸ்வரி, டிஆர்டிஓ இயக்குநர் ஜெனரல் ஏ.கே.சிங் இந்த பைக் ஆம்புலன்ஸ் பாதுகாப்பு அவசரகால தேவைகளில் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ராணுவ உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிஆர்பிஎப் அலுவலர் ஒருவர் கூறுகையில், பதற்றமான பகுதிகளில் குறிப்பாக மாவோயிஸ்டு, நக்சல்கள் நடமாட்டம் மிக்க பகுதிகளில் துப்பாக்கிச் சண்டைகளின்போது மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் குறுகிய பாதைகளில் வேகமாக செல்ல வேண்டிய அவசியத்தை பலமுறை சிஆர்பிஎப் உணர்ந்துள்ளது. மருத்துவ வசதிகள் சரியான நேரத்தில் அடைய முடியாத நிகழ்வுகளும், மருத்துவ உதவிகளில் தாமதம் ஏற்பட்டதும் நோயாளிகளின் நிலைமையை மிகவும் சிக்கலானதாக ஆக்கியுள்ளன. அதன் விளைவாக இந்த பைக் ஆம்புலன்ஸ் 'ரக்ஷிதா' உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்குகள் துப்பாக்கிச் சண்டையின்போது ஏதேனும் சிஆர்பிஎஃப் ஜவான்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அவசர உதவி வழங்கும. இந்த பைக்குகள் பீஜப்பூர், சுக்மா, டான்டேவாடா போன்ற பகுதிகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் பெரிய வாகனங்கள் அல்லது ஆம்புலன்ஸ்களை வனப்பகுதிகளில் கொண்டு செல்வது கடினம்.

இவ்வாறு சிஆர்பிஎப் அலுவலர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.